ராஜபாளையம்: ராஜபாளையம் சுந்தரி ராஜா தெருவில் உள்ள நீர் காத்த அய்யனார் புதிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கொடை திருவிழா நடந்தது. கடந்த சனிக்கிழமை தொடங்கிமேல தாளத்துடன் தீர்த்த குடங்களை பக்தர்கள் சுமந்து அய்யனார் கோயிலில் இருந்து புதிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வரப்பட்டு அய்யனார் கருப்பசாமி, மாடன், மாடத்தி, சின்னத்தம்பி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து குல தெய்வ வழிபாட்டில் பங்கேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.