ஆடி வெள்ளி: வேப்ப மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2021 01:08
திண்டிவனம்: திண்டிவனம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் 25 ஆண்டு பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று வளர்ந்துள்ளது. இந்த மரத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பால் நிற்காமல் வடிந்து உள்ளது. அதனைத் தொடர்ந்து கமிட்டி எதிரில் இருக்கும் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பால் வடிந்த வேப்ப மரத்திற்கு அன்று முதல் வருடந்தோறும் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். ஆடி வெள்ளிகிழமையான இன்று கோலமிட்டு, மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வேப்பிலை ஆடை உடுத்தி, கேழ்வரகு கூழ், கொழுக்கட்டை, சாதம், கருவாட்டுக் குழம்பு, முட்டை உள்ளிட்டவைகளை படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.