பதிவு செய்த நாள்
06
ஆக
2021
04:08
செய்யாறு: செய்யாறு அருகே, வேப்பமரத்தில் பால் வடிவதால், அம்மனாக நினைத்து கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தாலிகால் கிராமத்தில், ஆறுமுகம் என்ற விவசாயி தோட்டத்தில் உள்ள, வேப்பமரத்தில் நேற்று அதிகாலை முதல், பால் வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தார். இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு பரவியது. இதையடுத்து கிராம மக்கள், ஆடி மாதத்தில் வேப்ப மரத்தில் பால் வடிவதால், தங்கள் கிராமத்தை காக்க அம்மன் கிராமத்திற்குள் வந்துள்ளதாக கூறி, பொங்கல் வைத்து வழிபட தொடங்கியுள்ளனர். மேலும், பக்கத்து கிராம மக்களும் வந்து, வேப்பமரத்தை வழிபட்டு செல்கின்றனர்.