பதிவு செய்த நாள்
06
ஆக
2021
04:08
நாமக்கல்: ஆடி வெள்ளிக்கிழமை, அமாவாசையில் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும், இன்று, ஆடி அமாவாசையான, வரும், 8, ஆடி வெள்ளிக்கிழமைகளான ஆக.,13 ஆகிய தேதிகளில் நிலைகளில் உள்ள சிவன், முருகன், அம்மன் மற்றும் முனியப்பன் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. வழக்கமான பூஜை வழிபாடுகள், அந்தந்த கோவில் பழக்கவழங்களின்படி பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும். சிறப்பு பூஜை வழிபாடுகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் இணையதளங்கள் வழியாக பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.