திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் குத்துவாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொந்தகையில் இதுவரை 10 மீட்டர் நீளம், அகலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகளும், 10 சமதள எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. 11 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதுமக்கள் தாழியில் இரும்பு வாள் கண்டறியப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு தாழியில் 46 செ.மீ., நீளமுள்ள குத்துவாள் கிடைத்துள்ளது.தற்போது ஒரே குழியில் கிடைத்த ஒரு அடி உயரமுள்ள மூன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகள், மண்டை ஓடு, சுடுமண் கிண்ணங்கள் வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.