பதிவு செய்த நாள்
06
ஆக
2021
04:08
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் மலைமாதா கோவில் பகுதியில், இரண்டாவது முறையாக வருவாய் துறையினர் அளவீடு செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மலை பகுதியில் மாதா கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சித்தாமூர் அடுத்த சோத்துப்பக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரித்த நீதிபதிகள், அச்சிறுப்பாக்கம் மலை பகுதியை அளவீடு செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன் அடிப்படையில், அக்கோவில் பகுதியைச் சுற்றி கடந்த ஜூன் மாதம் நில அளவு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் தாசில்தார் நடராஜன், அச்சிறுப்பாக்கம் நில அளவையர் நாகராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் இளவரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில், நேற்று மீண்டும் அளவீடு செய்யப்பட்டது. இது குறித்து, மதுராந்தகம் தாசில்தார் நடராஜன் கூறுகையில், மலைமாதா கோவிலை சுற்றியுள்ள இடம் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டது. குன்று மேல் பகுதி உள்ளிட்ட இடங்களை தற்போது அளவிட்டுள்ளோம். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், என்றார்.