* வெற்றி பெற நல்லவரின் ஆலோசனையை கேளுங்கள். * முட்டாளின் பார்வைக்கு அவனது வழி சரியாகவே தோன்றும். * உண்மையை பேசு. சுதந்திரமாக இரு. * பிறர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசாதே. * தீய செயல்களை செய்து பாவத்தை சம்பாதிக்காதே. * பிறருடன் சண்டையிட்டு உங்களின் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர். * உடன்பிறந்தோரை திட்டினால் நரகத்திற்கு செல்வாய். . * பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறக்கும். * உணவும், உடையுமே போதுமென்று திருப்தி அடையுங்கள். * நேர்மையாளனின் முடிவு அமைதியானதாக இருக்கும். * மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். * எளியவனுக்கு உதவி செய்பவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். * தீய சொல்லில் இருந்து உங்களை நாவை காத்திடுங்கள். * சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும். * பிறர் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் பிறருக்கு செய்யுங்கள். * நல்லவர்களால் பூமிக்கு நன்மை. * புத்திசாலி பெண்ணால் வீடு காக்கப்படும். * ஏழை, ஊனமுற்றோருக்கு விருந்து கொடுங்கள். – பொன்மொழிகள்