சட்டநாதபுரம் சந்தான மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2021 09:08
மயிலாடுதுறை : சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தான மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் பழைமை வாய்ந்த சந்தான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.இங்கு ஆடி மாத வெள்ளி கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.அருள்மிகு சந்தான மாரியம்மன் சன்னிதி முன்பு 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி பூழை செய்தனர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் அனைவரும் விடுபடவும்,உலக நன்மை வேண்டியும், குடும்பத்தில் நன்மை வேண்டியும் மஞ்சள், குங்குமம், தாலி ஆகியவற்றை வைத்து பூஜைகள் செய்து குத்து விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து சந்தான மாரியம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.