அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் உலக நன்மைக்காக கணபதி ஹோமத்துடன் துவங்கி, மஹா மிருத்யுஞ்ஜய யாகம் நடந்தது. கொரோனா வைரஸ் முடிந்து பள்ளிகள் திறக்க, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக ஆடி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் பார்வதிக்கு16 வகை திரவியங்கள், வண்ண மலர்களால் சிறப்பு அர்ச்சனை நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.