பதிவு செய்த நாள்
09
ஆக
2021
03:08
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில், புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்ததால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல், உறவினர்கள் பாதிப்படைந்தனர்.
தமிழகத்தில் கொரனோ அச்சம் காரணமாக, ஆடி அமாவாசையான நேற்று, கடல் மற்றும் ஆறுகளில், புனித நீராட அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், நேற்று தேவிப்பட்டினம் நவபாஷாணம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்கள் மூடப்பட்டன. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல், உறவினர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து உப்பூர் மோர்ப்பண்ணை, காரங்காடு, திருப்பாலைக்குடி, ஆற்றாங்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர். கோவில்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு, கோவில்கள் பூட்டப்பட்டிருந்ததால், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சொல்லிட்ட முக்கிய கோவில்களில், கோபுர தரிசனம் செய்து முன்னோர்களை வழிபட்டு சென்றனர். வழக்கமான நடைமுறையில், முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய முடியாததால், உறவினர்கள் வேதனையுடன் திரும்பிச் சென்றனர்.