Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஆயிரம் பசு தானம்
படலம் 92: ஆயிரம் பசுக்கள் தானம் செய்யும் முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
12:06

92வது படலத்தில் ஆயிரம் பசு தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் ஸித்தியின் பொருட்டு ஆயிரம் எண்ணிக்கை உள்ள பசுக்களின் தானம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. கன்றுக் குட்டியுடன் கூடியதும் நல்ல குணங்களை உடையதுமான பசுக்களை தானம் செய்ய ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவைகளில் நல்ல குணமுடைய எட்டு பசுக்களை பூஜிக்கவும் அவைகளின் கொம்புகளில் நிஷ்க அளவுடைய தங்கமும் வெள்ளிக் குளம்பும் கழுத்தில் தங்கத்தால் நிஷ்க அளவுள்ள பட்டையும் கட்டி அவைகளுக்கு புல் கொடுக்கவும் என கூறப்படுகிறது. துலாரோஹண விதிப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். துலாபார முறைப்படி சிவ ஆராதனமும் ஹோமமும் செய்யவும். பரமேஸ்வரனுக்கு ஸஹஸ்ர கலச அபிஷேகம் செய்து பெரிய பூஜை செய்யவும். பிறகு சிவனுக்கும், சிவ பிராம்ணர்களுக்கும் தட்சிணைகளுடன் கூடிய பசுக்களை கொடுக்க வேண்டும் என கூறி தட்சிணை கூறப்படுகிறது. பிறகு தான காலத்தில் கர்த்தா சொல்ல வேண்டிய ஸ்லோகம் சொல்லப்படுகிறது. முடிவில் இங்கு சொல்லப்படாத எந்த கர்மா உண்டோ அதை துலாரோஹண முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 92வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. விருப்பத்தையடையும் பொருட்டு ஆயிரம் எண்ணிக்கையுள்ள பசுக்களை தானம் செய்யும் முறைப்பற்றி கூறுகிறேன். அவைகள் கன்று குட்டியுடனும் நல்ல குணத்துடனும் உள்ளதாகவே ஏற்கப்பட வேண்டும்.

2. எட்டு பசுக்களை கீழ்கண்டவாறு பூஜிக்கவும். ஒவ்வொரு கொம்பிலும் நிஷ்க அளவு ஸ்வர்ணத்தால் கொம்பும் வெள்ளியால் குளம்புமோ கட்டப்படவேண்டும்.

3. கழுத்தில் நிஷ்க அளவால் தங்கப்பட்டம் கட்டி பயிர்களை கொடுக்கவும். வேதிகை மண்டலத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து

4. முன்பு போல் சிவபூஜையையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். பிறகு சிவனுக்கு ஆயிரத்தி எட்டு கலசங்களால் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

5. சிவனின் பொருட்டு (சிவனுக்காக) ஆதி சைவர்களுக்கு தட்சிணையுடன் கூடியதாக பசுவை தானம் செய்யவும். தட்சிணையானது பத்து நிஷ்கமோ அதில் பாதி 5, அதில் பாதியோ (இரண்டரை), ஒரு நிஷ்கமோ கொடுக்க வேண்டும்.

6. கர்த்தாவானவன் தானம் செய்யும் காலத்தில் இந்த ஸ்தோத்ரத்தை சொல்ல வேண்டுமென கூறப்படுகிறது. காவோ மமாக்ரத நித்யம், காவ ப்ருஷ்டத ஏவ மே (பசுக்கள் நித்யம் என் முன்னாலும் பின்னாலும் நிற்கட்டும்)

7. (பசுக்கள் ஹ்ருதயத்தில் நித்யமிருக்கட்டும், பசுக்களின் மத்தியில் நான் வசிக்கிறேன்) காவோ மே ஹ்ருதயம் நித்யம் கவாம் மத்யே வஸாம்யகம் என்று கூறவும். இங்கு சொல்லப்படாத க்ரியையை துலாபார விதியில் சொல்லப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸஹஸ்ர கோதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி இரண்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar