தேவகோட்டை: தேவகோட்டை அபிராமி அம்மன் கோயிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு ஒரு வாரமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. ஆடிப்பூரமான நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு பூச்சொரிதலும் பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு காலை அபிஷேகமும் , இரவு சிறப்பு பூஜையும் நடந்தன. ஆடிப்பூரமான நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபம் ஏற்றி பூஜைகள் நடந்தன.