உப்பூர்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே மயிலூரணியில், முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு கோவிலில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்தனர். இதே போன்று மேலசேந்தனேந்தல், பாரனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.