கமுதி: கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் சிவகாளி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம்,அக்னிச்சட்டி எடுத்து ஊர்க்காவலன் கோயில் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து சிவகாளியம்மன் கோயிலுக்கு சென்றனர்.பின்பு அம்மனுக்கு பால்அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.கோயில் முன்பு கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோன்று பசும்பொன் ராஜகாளிஅம்மன் கோயில், மண்டலமாணிக்கம் வாழவந்த அம்மன், மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது.