விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2021 06:08
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோயிலில் ஆவணி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று(12ம் தேதி) கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சொக்கநாதர், மீனாட்சி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.