பதிவு செய்த நாள்
13
ஆக
2021
03:08
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தங்க காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. தர்மகத்தாக்கள் கண்ணன், முத்தம்மாள், மாரிமுத்து, பூசாரிகள் சுரேஷ், கோவிந்தன், ஏழுமலை, சிலம்பரசன், சக்திவேல், ஆறுமுகம், செந்தில், கண்ணன், ஆகியோர் பூஜைகளை செய்தனர்.