பதிவு செய்த நாள்
13
ஆக
2021
03:08
சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையிலுள்ள ஓம்சக்தி கோவிலின் 36வது ஆடிப்பூரம் திருவிழா, இன்று ஆரம்பமாகிறது. நாளை, நாளை மறுநாள் என, மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது.
இன்று காலை 6:00 மணிக்கு, சக்திக் கொடி ஏற்றி, காப்பு கட்டப்படும். 6:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ஓம்சக்தி, பிரத்தியங்கிரா தேவிக்கு பால் அபிஷேகம் நடைபெறும். நாளை காலை 7:00 மணிக்கு, 11 நதி தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம்; 9:00 மணிக்கு கணபதி, நவக்கிரகம், ஓம்சக்தி, பிரத்தியங்கிரா தேவி ஹோமம்;வரும், 15 ல், பிற்பகல் 12:30 மணிக்கு, கூழ் வார்த்தல், சிறப்பு பூஜை, 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு, சக்தி திரிசூலம், சக்தி கொடி, தீச்சட்டிகள், வேப்பிலை கரகங்கள், பால் குடங்கள், பூக்கரகங்கள், ஊர்வலம் நடைபெறும்.சரளா சுவாமி, சந்தோஷ், பரசுராம், நித்தியானந்தம், நாகராணி ஆகியோர், பூக்கரகங்களை சுமந்து செல்வர். இரவு 9:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
மூன்று நாட்களும் மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம், இனிப்பு வினியோகிக்கப்படும். விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் சக்தி டி.சண்முகம் செய்துள்ளார்.