வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர் கருடன். விஷ்ணுவுக்கு வாகனமாக இருப்பதால் ‘விஷ்ணு ரதம்’ எனப்படுகிறார். பெருமாள் கோயிலில் கருவறை எதிரில் இருக்கும் இவரை தரிசித்து அனுமதி பெற்ற பின்னரே கருவறைக்குச் செல்ல வேண்டும். வானில் வட்டமிடும் கருடனைக் காண்பது நல்ல சகுனத்தின் அறிகுறி. பழுப்பு நிறமும், கழுத்தில் வெண்மையும் கொண்ட கருடனைக் காண்பவர்கள் பெருமாளே பவனி வருவதாக கருதி ‘கிருஷ்ணா கோவிந்தா’ என்று சொல்லி வழிபடுவர்.