மன்னர் அலெக்சாண்டர் பல நாடுகளை வெற்றி கொண்டார். அவரைச் சந்தித்த ஒருவர், நீங்கள் வெற்றி கொள்கிறீர்கள். பிறரால் ஏன் இப்படி செய்யமுடியவில்லை எனக்கேட்டார். “நான் எந்த நாட்டை கைப்பற்றுகிறேனோ அங்குள்ள மக்களுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்துவேன். முன்பு ஆட்சி செய்தவரை விட அலெக்சாண்டர் அதிகமாக செய்கிறாரே.. என பேச வைப்பேன். அதுமட்டுமில்லாமல் என்னிடம் தோற்றவர்களை நண்பர்களாக கருதுவேன். இவையே எனது வெற்றியின் ரகசியம் என்றார். உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.