தர்மம் செய்து கொண்டே இருந்தால், என் பணமெல்லாம் குறைந்து போய் விடுமே! அதன்பிறகு, நான் கஷ்டப்பட வேண்டுமா? என்ற எண்ணம் அநேகரிடம் இருக்கிறது. ஆனால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்,தர்மம் செய்வதால் செல்வம் குறைவதில்லை, என்கிறார்கள். அதனால் தான் ஆண்டுக்கு ஒருமுறையேனும் தர்மம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் ஜகாத் வகுக்கப்பட்டிருக்கிறது. நாயகம் அவர்களே! ஒரு மனிதர் ஜகாத்தை கொடுத்தால் அவருக்கு என்ன நன்மை உண்டு? என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அண்ணல் நபிகளார்,ஜகாத் கொடுத்தவரது சொத்திலிருந்து தீமைகள் அகன்று சென்றுவிடும், என்றார்கள். ஒரு சிலர், ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதாதா! பலமுறை கொடுக்க ÷ வண்டுமா? என கேட்கிறார்கள். இது தவறான கருத்து. ஜகாத் ஒரு மனிதனின் சொத்தை அபிவிருத்தியே செய்யும். ஜகாத் வழங்கினால் இறையருள் கிடைக்கும். அதன்பின், நமது சொத்துக்களை பெருக்கிக் கொள்வதற்கான வழியை இறைவன் நமக்கு காட்டி விடுவான். அதனால் செல்வம் பெருக வே செய்யும். இனியேனும் இயன்ற அளவு தர்மம் செய்யுங்கள். இறைவனின் கருணைக்கு ஆளாகுங்கள்.