சங்கரன்கோயிலில் அமைந்துள்ள நாக சுனையில் நீராடித்தான் இந்திரன் மகன் ஜெயந்தன் தனது காக்கை உருவம் நீங்கப் பெற்றான். எனவே ஆடித்தபசு அன்று இந்த நாக சுனையில் நீராடி அம்பாளின் ஆடித்தபசுக் காட்சியைக் காண்பவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சகல பீடைகளும், தோஷங்களும் நீங்கி, சகல சந்தோஷங்களும், செல்வமும், வந்தடையும் என்பது ஐதீகம். இந்த நாக சுனையில் மீன், நண்டு, முதலிய நீர் வாழ் உயிரினங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.