திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2021 12:08
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோயில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது. ஆவணி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் கோயிலுக்குள் அம்மன் எழுந்தருளி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 10ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் ஊரடங்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் படி கோயில் வளாகத்தில் தேரோட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.