பதிவு செய்த நாள்
16
ஆக
2021
02:08
ஊத்துக்கோட்டை: ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, எல்லையம்மனுக்கு நடந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ரெட்டித் தெருவில் உள்ளது எல்லையம்மன் கோவில். இக்கோவிலில், ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமையான நேற்று காலை, அம்மனுக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், பெண்கள் தலையில் கூழ்பானையை சுமந்து, கோவிலை மூன்று முறை வலம் வந்து அம்மனுக்கு படைத்தனர். பின், அம்மனுக்கு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல், அண்ணா நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலிலும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.