திருக்கனுார்: செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில் 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வரும் 21ம் தேதி நடக்கிறது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வரும் 21ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடக்கிறது.முக்கிய நிகழ்வாக, மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சர்வ பூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.