பதிவு செய்த நாள்
18
ஆக
2021
06:08
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டி ராக்கி செட்டியார் தோட்டத்தில், மகா முனியப்பசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கருவறை, அர்த்த மண்டபம், மடப்பள்ளி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இதன் திருக்குட நன்னீராட்டு விழா நாளை காலை, 8:00 முதல், 9:00 மணிக்குள் நடக்கிறது.இதனையொட்டி இன்று மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு, புனிதநீர், ஆனைந்து, மூத்த பிள்ளையார், திருமகள் மற்றும் நிலத்தேவர் வழிபாடுகள் நடக்கின்றன.
தொடர்ந்து புற்றுமண் எடுத்தல், முளையிடுதல், முதற்கால வேள்வி, திருமறை விண்ணப்பமும், இரவு, 9:00 மணிக்கு அன்னதானமும் நடக்கின்றன. 20 அதிகாலை, 5:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருவிளக்கு, ஆனைந்து ஆட்டம், காப்பணிவித்தலும் நடக்கின்றன. இதையடுத்து வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமறை விண்ணப்பம் வாழ்த்து, திருக்குடங்கள் யாக சாலையிலிருந்து புறப்படுதலும் நடக்கின்றன. 8:00 மணிக்கு முக்கிய நிகழ்வான விமான திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மகா முனியப்பசுவாமிக்கு நன்னீராட்டும் நடக்கின்றன. தொடர்ந்து பதின் மங்கல காட்சி, பெருந்திரு மஞ்சனம், பேரொளி வழிபாடு, அருளார் N அமுதம் வழங்கல் மற்றும் அன்னதானம் வழங்கல் நடக்கின்றன. ஏற்பாடுகளை சரவணகுமார் செய்துள்ளார்.