பெங்களூரு: வழிபாட்டு தளங்களில், ஆட்டோமெட்டிக் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தீர்த்தம் வழங்கும் கருவியை தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வடிவமைத்துள்ளார்.
தட்சணிகன்னடா மாவட்டம், மங்களூரில் உள்ள நிட்டி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்.எம்.ஏ.எம்., தொழில்நுட்ப கல்லுாரியில் உதவி பேராசிரியராக இருப்பவர் சந்தோஷ்.இவர் சில மாணவர்களுடன் இணைந்து, ஆட்டோமெட்டிக் சென்சார் தீர்த்தம் தெளிக்கும் கருவியை வடிவமைத்துள்ளார்.பேராசிரியர் சந்தோஷ் கூறியதாவது:இந்த கருவியை கோவில்களில் வைப்பதால், சமூக விலகல் பின்பற்றப்படும். கருவியில் கைகளை நீட்டினால், தீர்த்தம் வழங்கப்படும். கருவியை எளிமையாக கோவில்களில் பொருத்தலாம்.கருவியில் தீர்த்தம் நிரப்புவதும் எளிமை தான். மேலும், அதிகமான மின்சார தேவையும் இருக்காது. பொதுமக்களும், பாதுகாப்புடன் கோவில் தீர்த்தம் பெறலாம்.இவ்வாறு கூறினார்.