புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
முத்தியால்பேட்டை, முத்தைய முதலியார் பேட்டையில் முத்துமாரியம்மன் முத்தைய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம் நாளை (20ம் தேதி) நடக்கிறது.நேற்று முன்தினம் காலை 8.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று காலை 7.௦௦ மணிக்கு வேதபாராயணம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 8.௦௦ மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோபூஜை ,கஜ பூஜைகள் நடக்கிறது.நாளை (20ம் தேதி) காலை 5.௦௦ மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, 8.௦௦ மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. 8:15 மணிக்கு முத்தைய சுவாமி ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.௦௦ மணிக்கு மஹா அபிஷேகம், இரவு 7.௦௦ மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.