பதிவு செய்த நாள்
20
ஆக
2021
04:08
சூலூர்: சூலூர் வட்டார கோவில்களில், வரலட்சுமி பூஜையை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
சூலூர் வட்டார கோவில்களில், வரலட்சுமி பூஜையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், காட்டூர் மாகாளியம்மன் கோவில், குரும்பபாளையம் பத்ரகாளியம்மன் கோவில், காடாம்பாடி சாந்த சிவகாளியம்மன், சூலூர் குடலுருவி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அலங்கார பூஜை முடிந்தபின், பெண்களுக்கு பூ, மாங்கல்ய சரடு, மஞ்சள் குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.