பதிவு செய்த நாள்
20
ஆக
2021
05:08
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் கிராமத்தில், 16ம் நுாற்றாண்டை சேர்ந்த எல்லை கற்களை கண்டெடுத்தனர்.
உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர்கொற்றவை ஆதன் கூறியதாவது.கடல் மங்கலம்கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள பாட்டி அம்மன் கோவில் அருகில், நிலத்தின் எல்லையை குறிக்கும், 16ம் நுாற்றாண்டை சார்ந்த, 2 அடி அகலம், 1.5 அடி உயர வாமனக்கல்லை கண்டெடுத்தோம். இது விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்தது.மன்னர்கள், பெருமாள் கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கும்போது, அப்படி வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையை குறிக்கும் அடையாளமாக அதில், விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன உருவம் பொறித்த கல்லை நடுவார்கள்.மேலும், அழிஞ்சல் காட்டுப்பகுதி சிவன் கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கல் ஒன்றை கண்டறிந்தோம். இதேபோன்ற சூலக்கல்லை, பாப்பாத்தி குட்டை அருகில் கண்டெடுத்தோம்.இவை, 1.5 அடி அகலம், 1 அடி உயரம் கொண்டவையாக உள்ளன. இரு சூலக்கற்களிலும் சூரியன், சந்திரன், சிவலிங்கம் ஆகிய உருவங்கள்இடம் பெற்றுள்ளன. தானத்திற்கு குறியீடாக இவற்றை பொறிப்பர்.ஒரே ஊரில் பெருமாள் மற்றும் சிவன் கோவிலுக்கு, நில தானம் அளித்த கற்கள் இருப்பதை நாங்கள் கண்டறிவது முதல்முறை.இவ்வாறு அவர் கூறினார்.