புதுச்சேரி-கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இந்திய.கம்யூ., நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிக்குப்பத்தில், மிகத் தொன்மையான பிள்ளையார் கோவில் குளம் நெஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த குளம், நிலத்தடி நீர் சேகரிப்புக்கு ஆதாரமாக உள்ளது.தற்போது சிலர் இந்த குளத்தின் நீர் வழி ஆதாரங்களை நிரந்தரமாக மூடி, சிமென்ட் கான்கிரீட் கழிவுகளை குளத்தில் கொட்டி துார்த்து வருகின்றனர்.குளத்தை பாதுகாக்க, சாலை ஓரம் உள்ள சிமென்ட் சுவரை உயர்த்தி கட்டி, சுற்றிலும் படிக்கட்டுகள் அமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும்.குளத்திற்கு நீர் வரும் பாதைகளை சீரமைத்து, குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட வேண்டும். நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வேண்டும்.கருவடிகுப்பத்தில் சாலைகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.