உப்பூர்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஊரணங்குடி முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக, அனுக்கை, விநாயகர் வழிபாடுகளும், முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. பின்பு கோ பூஜை, லெட்சுமி பூஜை நடைபெற்று யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.