சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே செல்லியம்மன், முருகன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுபாக்கம் அடுத்த மலையனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன், விநாயகர், முருகன், அய்யனார், கருப்பையா கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோவில்களில் யாக குண்டங்கள் அமைத்து, நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. நேற்று காலை 10:30 மணியளவில் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.