அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2021 06:08
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ‛அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என, தமிழக அரசு அறிவித்து பணி ஆணை வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்துள்ளதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஹிந்துக் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது கிடையாது. எனவே, இந்த ஆணையை தமிழக அரசு நீக்க வேண்டும். பாரம்பரியம் மாறாமல் பூஜைகள் நடை பெறுவதற்கு இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவு போடுவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.