பூஜைக்கான இடத்தை மெழுகி சுத்தப்படுத்தி மாக்கோலமிட்டு மண்டபமாக அமைக்க வேண்டும். பூச்சரங்கள், கலர் பேப்பர்களால் அலங்காரம் செய்யலாம். மண்டபத்தின் முன் வாழை இலையில் நெல்லும், அதன் மீது ஒரு தட்டு நிறைய பச்சரிசியும் பரப்பி கலசம் வைக்க வேண்டும். கலசத்தில் அரிசி, தங்கம், ரத்தினம், காதோலை, கருகமணி, எலுமிச்சம்பழங்களை நிரப்பலாம். முடியாவிட்டால் தண்ணீர் நிரப்பினால் போதும். கலசத்தின் மீது நுால் சுற்றி மாவிலைகளை அடுக்கி அதன் மீது தேங்காய் வைக்க வேண்டும், கலசத்திற்கு புதிய வஸ்திரம் சாத்த வேண்டும். தங்கம் அல்லது வெள்ளியால் செய்த மகாலட்சுமி முகம் அல்லது மஞ்சளால் ஆன பிம்பம் வைக்கலாம். முடியாவிட்டால் மகாலட்சுமி படம் வைத்தும் வழிபடலாம்.