கூடலூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரளா குமுளி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதியில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. கேரளாவில் முக்கிய திருவிழாக்களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் இப்பண்டிகையில் அத்தப்பூக்கோலம் போடுவது சிறப்பம்சமாகும். இதற்காக தமிழகத்தில் இருந்து அதிகமான பூக்கள் கேரளாவிற்கு கொண்டுசெல்லப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூக்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குமுளி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் அவரவர் வீடுகளில் இருக்கும் பூக்களை பறித்து அத்தப்பூ கோலம் போட்டு எளிமையாக கொண்டாடினார்.