பதிவு செய்த நாள்
25
ஜூன்
2012
10:06
மங்களூரு: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில், பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே பதிவு செய்ய "ஆன்-லைன் (இ-சேவா) வசதி துவக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கொல்லூரில் பிரசித்திப் பெற்ற மூகாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், பூஜை போன்றவற்றிற்காக பதிவு செய்ய முடியாமல், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கார்ப்பரேஷன் வங்கி சார்பில், http://www.kollurmookambika.co.in என்ற புதிய இணையதள வசதி துவக்கப்பட்டுள்ளது. இதில், கோவில் பற்றிய விவரங்களும், அங்கு நடத்தப்படும் பூஜை, கட்டணங்கள் குறித்த முழு விவரங்களும் இடம் பெற்றுள்ளன. பூஜைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து, பணம் செலுத்தி விட்டால், பூஜைகள் குறித்த விவரங்களும், அவர்களுக்குரிய தேதி, நேரம் போன்றவையும், அதற்குரிய கோவில் அதிகாரியின் உறுதியும் வழங்கப்படும்.