தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2021 10:08
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தருவதால், நவபாஷணம் வெறிச்சோடி காணப்பட்டது.
தேவிபட்டினம் நவபாஷணத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜை செய்யவும், பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம்.கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த மாதம் முதல் நவபாஷணம் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் அரசு கோவில்களில் வழிபட அனுமதி அளித்தது. நவபாஷண கடற்கரை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட, மிகக் குறைந்த அளவிலான பக்தர்களை நவபாஷண கடற்கரைக்கு வந்து தரிசனம் செய்தனர். வெள்ளி, சனி, ஞாயிறன்று பக்தர்கள் வழிபட தடை நீடிப்பதால், பக்தர்கள் வருகை மேலும் குறையும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.