மானாமதுரை : மானாதுரை அருகே உள்ள கீழப்பசலையில் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் முகக்கவசம் அணிந்து முளைப்பாரி எடுத்து வந்தனர்.
கீழப்பசலை முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு கொரோனா தொற்று ஒழிய வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரி வைத்திருந்த கிராம மக்கள் தினந்தோறும் கும்மி கொட்டி சுவாமியை வழிபட்டு வந்தனர்.நேற்று காலை முளைப்பாரிகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக துாக்கி சென்ற மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து முளைப்பாரிகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.