Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்திரகாளியம்மன் கோயிலில் ... தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை நீடிப்பு
எழுத்தின் அளவு:
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை நீடிப்பு

பதிவு செய்த நாள்

26 ஆக
2021
09:08

சென்னை: ‛‛வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையே தொடரும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவு கொண்டுவர 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோயின் தாக்கத்தை பொறுத்து ஒவ்வொரு முறையும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா 2வது அலை குறைந்துள்ள நிலையில் 3வது அலையை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆடி மாதம் வழிபாட்டுத் தலங்களில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில் ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூடவும், வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெறவும் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக 3 வாரமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்தாலும் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால் கோயில் வாசலில் வைத்து திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கள் முதல் பல்வேறு கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் செப்.,1ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நடத்தும் மதுக்கூடங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில், தற்போது ஏற்கனவே அறிவித்தது போல கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு வழிபாட்டு தலங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் மற்றும் பிரார்த்தனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar