பதிவு செய்த நாள்
26
ஆக
2021
12:08
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் சித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது.கிணத்துக்கடவு, கோவிந்தாபுரத்தில், பழமையான சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகளான விமானம், முன்மண்டப பணிகள் துவங்கி, சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு விழா நடத்த, முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு தமிழ் முறையில் மந்திரங்கள் முழங்க, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் மற்றும் பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் பேராசிரியர் சென்னியப்பனார் ஆகியோர் முன்னிலையில், திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. மக்கள் பங்கேற்று, கோபுர தரிசனம் செய்தனர்.