வீரபையம்மாள் கோயிலில் விமரிசையாக நடந்த கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2021 03:08
மேல ஈரால் அப்பனூர்வாளு தயாதிகளின் குலதெய்வ திருக்கோவிலான, அருள்மிகு ஸ்ரீ வீரபையம்மாள் திருக்கோவிலின் வருடாந்திர கலசாபிஷேக விழா, நேற்று (26ம் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் கலசங்கள் வைத்து யாகங்கள் நடத்தப்பட்டன. பின், நேற்று காலை 10.45 மணிக்கு மேல், 11.45 மணிக்குள், கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீ வீரபையம்மாள் அம்பாளுக்கும், இதர பரிவார தெய்வங்களுக்கும் அதன் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தன. பின், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வீரபையம்மாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த கலசாபிஷேக விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.