திருநெல்வேலி: நெல்லையி திருமண முகூர்த்தநாளான நேற்று கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆவணி மாதத்தில் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும். முகூர்த்தநாளான நேற்று ஏராளமான திருமணங்கள் நடந்தன. இதனால் நெல்லை ஜங்ஷன், பாளையஞ்சாலைக் குமாரசாமி, பாளை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருமண வீட்டினர் கூட்டம் அதிகமாக இருந்தது. வெள்ளிக்கிழமை கோயில்களில் மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றாலும் அனைத்து கோயில்களி லும் மக்கள் திரண்டனர். சில கோயில்களில் மணமக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டும் அனுமதிக்கப்பட்டன ர் . திருமண நிகழ்வுக்கு சென்ற பெரும்பாலானோர் சுவாமி தரிசனம் செய்ய முடியால் திரும்பினர்.