பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயிலில் வெள்ளி ரத வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2021 12:08
சிவகங்கை: பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயிலுக்கு எஸ்பி.வி.எம்.,தியாகராஜன்– மாலதி தம்பதியினர் ரூ.1 கோடியில் செய்யப்பட்ட 100 கிலோ எடையிலான வெள்ளி ரதம் வழங்கினர். பாகனேரியை சேர்ந்த இவர் புல்வநாயகி அம்மன் கோயிலுக்கு வெள்ளி ரதம் வ ழங்குவதாக வேண்டுதல் வைத்தார். காரைக்குடி சிற்பி சேது தியாகராஜன் மூலம் பத்தேமுக்கால் அடி உயரத்தில் வெள்ளி ரதம் தயாரித்து கொடுத்தார். இந்த ரதம் புல்வநாயகி அம்மன் கோயில் உட்பிரகாரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் வெள்ளோட்டம் நடந்தது. எஸ்பி.வி.எம்., தியாகராஜன் கூறியதாவது: நாங்கள் சேமித்து வைத்த ரூ.1 கோடியில் வெள்ளி ரதம் தயாரித்து வழங்கினோம். நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி கோயில் வெள்ளி ரத உற்ஸவத்தை காணும் போதெல்லாம் பாகனேரிக்கும் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு இந்த வெள்ளி ரதம் வழங்கி, புல்வநாயகி எனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் உள்ளேன், என்றார்.