பதிவு செய்த நாள்
29
ஆக
2021
02:08
சென்னை: கோவில் நிலங்களை, அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்கள் வாயிலாக அளக்கும் பணியை விரைவாக முடிக்க, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பரிசீலனை குழுஅறநிலையத்துறை இணை, துணை, உதவி கமிஷனர்களுக்கு, கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பது குறித்து, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுப்படி, அனைத்து கோவில்களிலும் நிலங்களை கண்டறியும் குழு, பரிசீலனை குழு அமைக்கப்பட்டு, நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
நில அளவீடு பணியை முடிக்க, மண்டலம் தோறும் நில அளவையாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இப்பணியை விரைந்து முடிக்க வசதியாக, ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.அதன்படி, எந்தெந்த கோவில்களில், எந்தெந்த நாட்களுக்கு, நில அளவையாளர்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வது குறித்த விபரங்களை அனுப்ப வேண்டும்.நில அளவையாளர்களுக்கு வசதியாக, கோவில் நில ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வாகன வசதிஇப்பணிக்கு வசதியாக, மூன்று புல உதவியாளர்களை தினக்கூலி அடிப்படையில், பணியமர்த்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ஊதியம், நிதி வசதி இல்லாத கோவிலாக இருந்தால், நிதி வசதியுள்ள கோவில்களில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நில அளவையாளர்களுக்கு உரிய வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதிக பரப்பளவு உள்ள இடங்களில் இருந்து, நில அளவுப் பணிகள் துவக்க வேண்டும். முடிக்கப்பட்ட நில அளவை பணிகள் தொடர்பான விபரங்களை, கம்ப்யூட்டரில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.