கோவை: கோவை அவிநாசி சாலை கொடிசியா கண்காட்சி அரங்கம் அருகே உள்ள, ஸ்ரீஜெகன்நாதர் கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்திவிழாவை, ஆன்லைனில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்கான் அமைப்பு விழா ஒருங்கிணைப்பாளர் மதுகோபால் தாஸ் கூறியுள்ளதாவது:கோவை ஸ்ரீஜெகன்நாதர் கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பக்தர்கள் பேஸ்புக், யூடியூப், ஜூம் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆன்லைனில் குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. சிறப்பு அலங்காரத்தில் தரிசனம் அளிக்கும் ஸ்ரீ ராதாகிருஷ்ணர், ஸ்ரீஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவியரின் சிறப்பு தீபாராதனை, கலசஅபிஷே கம் நாமசங்கீர்த்தனை, பஜனை, கோபூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.இஸ்கான் அமைப்பு மண்டல செயலாளர் பக்தி வினோத ஸ்வாமி மஹராஜ் மற்றும் பல மூத்த பக்தர்களின், சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க நிறுவனர் ஸ்ரீலபிரபுபாதாவின், 125வது ஆண்டு பிறந்தநாள் விழாவான, வியாச பூஜை நாளை (ஆக.,31ல்) நடக்கிறது.நிகழ்ச்சிகளை, facebook-fb.me/ISKCONofCOIMBATORE youtube-
https://www.youtube.com/c/ISKCONCoimbatore ஆகிய சமூக வலை தளங்களில் பக்தர்கள் காணலாம். மேலும் விபரங்களுக்கு, 77083 58616 இந்த எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.