மகாவிஷ்ணு சூரிய வம்சத்தில் ராமனாக அவதாரம் செய்ததால் ரவிகுல திலகன் என்று அழைக்கப்பட்டார். சூரியனைப்போல தானும் பெருமை பெற வேண்டும் என சந்திரன் வேண்டினார். மனமிரங்கிய மகாவிஷ்ணு " உன் பெயரை என்னோடு சேர்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லி ராமச்சந்திர மூர்த்தி என மாற்றிக்கொண்டார். அத்துடன் அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் அவதரிப்பதாகவும் வாக்கு கொடுத்தார்.இதனடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தியான இன்று பூஜை முடித்து நிலாவை பார்ப்பதால் மகிழ்ச்சி நிலைக்கும்.