கிருஷ்ணன் மதுராவில் துவாபரயுகத்தில் அவதரித்தது அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்) ரோஹிணி நக்ஷத்திரத்தில் அப்போது இரண்டும் ஒரே நாள் ஒரே சமயம். கண்ணன் பிறந்த திதியான அஷ்டமியை கோகுலத்து ஜனங்கள் கொண்டாடினர். அதனால் கோகுலாஷ்டமி ஆயிற்று. கண்ணன் பிறந்த நாளான அஷ்டமி திதியும், ரோஹிணி நக்ஷத்திரமும் பல சமயங்களில் வெவ்வேறு நாளில் வரும். சில வருஷங்கள் ஒரே நாளில் வரும். மதுரா, துவாரகா போன்ற இடங்களிலும், மற்றும் பல சம்பிரதாயங்களிலும் இன்றும் கண்ணன் அவதரித்த அஷ்டமி திதியைத் தான் கொண்டாடுவார்கள். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பகவான் அவதரித்த நக்ஷத்திரமே முக்கியம். அதனால் ஆவணி ரோஹிணி வரும் அன்றே ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடுவார்கள்.