பதிவு செய்த நாள்
31
ஆக
2021
11:08
திருப்பூர்: திருப்பூரில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவிலில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி(கோகுலாஷ்டமி) விழா விமரிசையாக நடந்தது. காலையில், திருமஞ்சனத்தை தொடர்ந்து, நவரத்தின அங்கி அலங்காரத்தில் குருவாயூரப்ப சுவாமி அருள்பாலித்தார்.மாலை, 6:00 மணிக்கு அபிேஷகம், பஜனை, தீபாராதனை நடந்தது. குருவாயூரப்ப சுவாமி கோவிலில், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு, பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.
ராயபுரம், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், மூலவருக்கு திருமஞ்சனம் நடந்ததை தொடர்ந்து, ஸ்ரீநாத் அலங்காரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அருள்பாலித்தார். வேணுகோபால கிருஷ்ண சுவாமி உற்சவம், வெண்ணெய் தாழி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர், இந்திரா நகர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று மாலை, கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடந்தது. இவ்வாறு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா, பல்வேறு கோவில்களில் நடந்தது.இன்று பொன்னுாஞ்சல்திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா பூஜைகள் நடக்கின்றன. இன்று மாலை, ஸ்ரீகிருஷ்ணரை, பொன்னுாஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும், சங்குப்பால் வார்க்கும் வைபவமும் நடைபெற உள்ளது.