பதிவு செய்த நாள்
31
ஆக
2021
11:08
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்களுக்கான ஷெட் அமைக்கும் பணிகள், 3 ஆண்டுகளாக இழுபறி நீடித்து வருகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, 2 தேர்களை பாதுகாப்பாக நிறுத்த, 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஷெட் அமைக்கும் பணி, கடந்த, 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது. பணிகள், துவங்கி நடந்து வந்த, ஊரடங்கு காரணமாக, கடந்தாண்டு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின், மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. தற்போது, 18 மீ., உயரம், 12 மீ., அகலம், 24 மீ., நீளத்தில், இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில், தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஷெட்டின் மேல்புறத்தில் மட்டும், தகரங்கள் வேயப்பட்டுள்ளது. மற்ற நான்கு புரங்களும், திறந்த வெளியாக உள்ளது. இதனால், காற்று, மழை உள்ளிட்ட காரணங்களால், தேர் பாதிப்படையும் நிலை உள்ளது. மூன்று ஆண்டுகளாக, இழுபறியில் உள்ள புதிய ஷெட் அமைக்கும் பணி, எப்போது நிறைவடையும் என, பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் விமலா கூறுகையில்,"தேர் ஷெட் உயரமாக உள்ளதால், பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் பணிகள் துவங்கப்படும்,"என்றார்.