கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2021 11:08
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு நவநீத கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் செய்து பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.